2026 பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்....

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 10, திங்கள்கிழமை தொடங்கியது. ஜனவரி 15, வியாழக்கிழமை அன்று வரும் பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, பொதிகை, சிலம்பு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. பல ரயில்களில் காத்திருப்புப் பட்டியல் நீள்கிறது. ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை பயணிக்க முன்பதிவு தொடங்குகிறது. திரும்பும் பயணத்திற்கான முன்பதிவு நவம்பர் 19, புதன்கிழமை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி