விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர். மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.