ராஜபாளையம் அருகே சுவாமி திருக்கோயிலில் இரவு நேர காவலாளிகளாக பணியாற்றி வந்த பேச்ச முத்து, சங்கர பாண்டியன் ஆகியோர் இன்று (நவம்பர் 11) காலை வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, காவலாளிகள் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.