விருதுநகர்: புகையிலை, ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர் ரயில் நிலையத்தில் இரும்புப் பாதை காவல் நிலைய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரயிலில் சோதனை செய்த பொழுது அந்த ரயிலில் 25 கிலோ எடை உள்ள ஐந்து மூடைகள் இருப்பது தெரியவந்தது. 

அந்த மூடைகளை சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. 5 மூடைகளில் சுமார் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும் தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசி கடத்திவரப்பட்ட நிலையில் அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரயில் பயணிகளிடம் விசாரணை செய்ததில் அந்த அரிசி முறையில் குறித்து யாருக்கும் எந்த வித தகவலும் தெரியாத காரணத்தினால் மூடைகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. 

அதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் சோதனை செய்த நிலையில் தூத்துக்குடியைச் சார்ந்த காளிராஜா என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் 13 கிலோ கொண்டு சென்றது தெரிய வந்தது. அவரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 13 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி