கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சென்ற கட்சியின் பொதுச்செயலாளர் புஷ்பா ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஷ்பா ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?