தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் காத்திருக்கும் போராட்டம்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம், காலமுறை ஊதியம் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் வாக்குச்சாவடி பார்வையிடுதல் மற்றும் வருவாய்த் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராஜபாளையம், விருதுநகர், திருச்சுழி, வெம்பக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 11 வட்டங்களில் உள்ள 485 கிராம உதவியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி