முருகன் கோவிலில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் உள்ள ஸ்ரீ வாழை மர பால சுப்ரமணிய கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இன்று, திருக்கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சப்பரத்தில் எழுந்தருளினார். மாலை சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி முருகனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி