விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு வயது முதல் 15 வயது வரையிலான 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர் பங்கேற்று, தொடர்ந்து 2 மணி நேரம் 15 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.