விருதுநகர் மாவட்டம்: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12661) மார்ச் 02 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். அதேபோல், திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12632) மார்ச் 01 முதல் 15ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.