விருதுநகர்: மனைவி கள்ளக்காதல் விவகாரம்; கணவன் வெட்டிக் கொலை - வீடியோ

இராஜபாளையத்தில் அதிகாலை பயங்கரம்: மனைவி கள்ளக்காதல் விவகாரம்; கணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஓடைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (33) பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சந்தனமாரி (28) இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராம்குமார் தனது உறவினரான காளிராஜ் (25) என்பவரை தனது வியாபாரத்திற்கு உதவியாக வேலைக்கு வைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் காளிராஜ் மற்றும் சந்தனமாரி இருவருக்கும் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். 

இரண்டு ஆண்டுகாலம் பல இடங்களில் வசித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. காளிராஜிடம் ராம்குமார் தனது மனைவியுடன் உள்ள கள்ளக்காதல் உறவை விடுங்கள் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் இன்று அதிகாலையில் ராம்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து வடக்குக் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராம்குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூர்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான குற்றவாளி காளிராஜை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி