விருதுநகர் மாவட்டம் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி செங்கோட்டையிலிருந்து நாளை ஜூன் 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 16848), கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்கள் செல்லாமல், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதல் நிறுத்தமாக அருப்புக்கோட்டை, சிவகங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறுமார்க்கம் மயிலாடுதுறையிலிருந்து வரும் ஜூன் 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16847), வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி செல்லாமல், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய வழியாக செங்கோட்டை செல்லும். மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, அருப்புக்கோட்டை கூடுதல் நிறுத்தமாக இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.