இராஜபாளையம்: இரயில் பயணிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், நேர மாற்றத்தால் வேகம் எடுக்கும் கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயில் பயணிகள் மகிழ்ச்சி. 

இரயில்வே புதிய கால அட்டவணை திருத்தத்தின்படி நேர மாற்றங்களால் 20 நிமிடம் முன்னதாக கொல்லம் எக்ஸ்பிரஸ் வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2025 ஜன. 1 முதல் இரயில்வே புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இராஜபாளையம் வழியே இயங்கி வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) நேரம் பெரும்பாலான ஊர்களில் 20 நிமிடங்கள் முன்னதாக வருமாறு மாற்றம் கண்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்குள் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 80 கி.மீ. ஆகும். திருநெல்வேலி, நாகர்கோவில் வந்தே பாரத் இரயில்கள் சராசரி வேகம் மணிக்கு 85 கி.மீ ஆகும். அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸின் நேர மாற்றத்தின்படி எழும்பூரில் மாலை 5:00 மணிக்கு கிளம்பி இராஜபாளையம் அதிகாலை 1:48 மணிக்கு வந்து சேரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. (பழைய நேரம் அதிகாலை 2:08) 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் பயண நேரம் 8 மணி 48 நிமிடமாகும். சராசரி வேகம் மணிக்கு 70 கி.மீ., என உள்ளது. 

தென்காசி வரை சராசரியாக 70 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளதால் விரைவான பயணம் வரும் ஜனவரி முதல் சாத்தியமாகும் என இராஜபாளையம் ரயில் பயணாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் பேசினார். இவ்வளவு குறைவான நேரத்தில் பயண தூரத்தை கடக்கும் முதல் ரயிலாக கொல்லம் எக்ஸ்பிரஸ் மாறுவது வரவேற்கத்தக்

தொடர்புடைய செய்தி