அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த இந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர்கள் பாதிப்புக்கும், தண்ணீரை வடிகட்ட முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே பாதிக்கப்பட்ட வயல்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் மழைநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சேத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.