இராஜபாளையம்: கொலை குற்றவாளியை தேடும் போலீஸார்

ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் காவலர்களை வெட்டிக்கொலை செய்துவிட்டு, நாகராஜ் மற்றும் முனியாண்டி ஆகிய இருவர் கொள்ளையடித்துச் சென்றனர். நாகராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், முனியாண்டியை மூன்றாவது நாளாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளி கைது செய்யப்படாததால் தேவதானம் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. கிராமத்தில் அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி