இராஜபாளையம்: செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் டூவீலரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ண ராஜா மனைவி மகேஸ்வரி (65), நேற்று (ஜூலை 30) இரவு கடை தெருவில் நடந்து சென்றபோது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வேகமாக வந்த நபர் மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்று தப்பியோடினார்.

மேலும் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சின்னசுரைக்காய் பட்டி தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (22), என தெரிந்தது. அவரை பிடித்து 7 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி