விருதுநகர்: தொழிலாளி வெட்டி படுகொலை; அதிர்ச்சி தகவல்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வடக்கு மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் சோலைராஜ் (33). இவரும், இவரது தந்தையும் சேர்ந்து மைக் செட் தொழில் செய்து வருகின்றனர். நேற்று (ஜூன் 15) இரவு சுமார் ஏழு மணியளவில், இவர் வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் பாலம் அருகே நடந்து வந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் சோலைராஜை வழிமறித்து கொலை செய்து தப்பி ஓடி விட்டனர். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஸினா பீவி, தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையில் தனிப்படை அமைத்து நள்ளிரவு 3 நபர்களை பிடித்து கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 

ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக சோலைராஜுக்கும் இவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததாகவும் இதன் காரணமாக திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததும் தெரிய வந்தது. முத்துலிங்கம், கருப்பசாமி பாண்டி, பெருமாள்சாமி 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி