இராஜபாளையம்: பீகார் தொழிலாளி தவறி விழுந்து பலி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே அம்மையப்பபுரம் சாலையில் உள்ள அரிசி ஆலையில் பீகாரைச் சேர்ந்த சுரேந்தர் மாஞ்சி (34) என்பவர் நெல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் ஆலையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி