விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் சுற்று பகுதிகளில் இன்று (அக்.31) காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டன. இந்நிலையில் இராஜபாளையம், சமுசிகாபுரம், அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், புத்துார் ஆகிய சுற்று பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மதியம் நேரம் மிதமான சாரல் மழை பெய்தன. இந்த சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.