விருதுநகர்: குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிகாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை. மக்கள் மகிழ்ச்சி. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 16 நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. 

இதனால் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதேபோல நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதியான சத்திரப்பட்டி, வடகரை, சிவலிங்காபுரம், அய்யனாபுரம், சேத்தூர், தளவாய்புரம், முகவூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைசாமிபுரம், புத்தூர், நல்லமங்கலம் பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி