விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் செட்டியார்பட்டி ராஜாஜி இலவச மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தியது. நீதிபதிகள் சண்முகராஜ், ராமநாதன், ப்ரீத்தி பிரசன்னா ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மருத்துவமனை சார்பில் நீதிமன்றத்திற்கு இலவச சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. முகாமில் 50க்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.