இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசியம்மன் கோவில் மற்றும் மலட்டாறு உள்ளிட்ட பீட்டுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீராவி அருவியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது. இதனைத் தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நேற்று மாலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பக்தர்கள் ஆற்றைக் கடந்து மறுகரையில் உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லவும் வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து தடுப்பணை மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.