இராஜபாளையம்: தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி