இராஜபாளையம்: ரயிலின் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

ராஜபாளையம் அருகே உடல்நலக் குறைவால் மன உளைச்சலில் இருந்த வேலுச்சாமி (77), ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது கை துண்டிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கினார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி