இராஜபாளையம்: போக்சோவில் போட்டோகிராபர் கைது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 55 வயதான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். போட்டோகிராபரான இவர் சுப நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்ற போது, அப்பகுதியில் இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றொரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி