விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப. மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் தங்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கல்லூரிக்கு உற்சாகமாக வருகை தந்து, தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் விளையாட்டில் ஒரு மாற்று முயற்சியாக அனைத்து மாணவ, மாணவிகளும் தனது கண்கள் மற்றும் கால்களை கட்டிக்கொண்டு 100 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி காட்டி தனது திறமையை வெளிகாட்டினார்கள். மேலும் இந்த நிகழ்வின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக வருகைதந்த இராஜபாளையம் நகராட்சித் தலைவர் பவித்ரா ஷியாம், மாணவ, மாணவிகளின் வீரத்தையும், தைரியத்தையும் பாராட்டிச் சிறப்புரை ஆற்றினார். மேலும் நிறைய சாதனைகள் புரிய வாழ்த்துரையும் வழங்கினார்.