அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியது: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு செல்ல பாலம் அமைக்க சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தும், அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் மனு அளித்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும்.
இப்பகுதி தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் வனத்துறையிடம் அனுமதி பெறும் நடைமுறை கடினமாக உள்ளது. மேலும் பாலம் அமைக்க காலதாமதம் ஆகிறது. இருப்பினும் விரைவில் வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும். மேலும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கழிப்பறை, குடிநீர் வசதி அமைக்க இடம் தேர்வு செய்து விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.