இராஜபாளையம்: காங்கிரஸ் கட்சி சார்பாக பூத் கமிட்டி கூட்டம்...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பூத் கமிட்டி கூட்டம் காங்கிரஸ் அலுவலகம் நேருபவனத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ. ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் ஆஸ்கார் பிரடி கலந்துகொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை விளக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன். சக்தி மோகன், நகர் மன்ற உறுப்பினர் ஏ. டி. சங்கர்கணேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நகர, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி