இராஜபாளையம்: கொட்டும் மழையில் அதிமுக பொதுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கொட்டும் மழையில் சேரை குடையாக்கியபடி நடிகை விந்தியாவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள். 

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா ஜன. 19 நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் நடிகையும் அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான நடிகை விந்தியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திமுக ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி நடிகை விந்தியா பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தாங்கள் அமர்ந்திருந்த சேரை குடையாக்கி மழையில் நனைந்தபடி விந்தியாவின் பேச்சைக் கேட்டுநின்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி