இராஜ: காவலாளிகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் நவ. 10ம் தேதி இரவு காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முனியசாமியை போலீசார் நவ. 18 அன்று ராஜபாளையம் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே நாகராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், முனியசாமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி