ஸ்ரீவில்லிபுத்தூர்: போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம், ராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கின் தீர்ப்பில், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2024 அக்டோபர் மாதம் சிறுமி ஒருவருக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி