இராஜபாளையம்: தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது...

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டன. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை உடனடியாக பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். 

இராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி மேற்பார்வையில், தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வி தலைமையில், உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்திகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட குற்றவாளியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி