நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் (06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையத்திலிருந்து ஜனவரி 26 வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயில் (06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரயில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.