விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சதீஷ்குமார் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, அவரிடமிருந்து 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தென்றல் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, திவாகர் (28) என்பவர் 26 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.