விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கலங்காபேரிபுதூர் கிராமத்தில் வசிக்கும் 62 குடும்பங்களை காலி செய்ய ஆண்டாள் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 300 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள், தங்களுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டதாகவும், பொதுமக்களை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கையுடன் நிலம் கோயிலுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர். கிராம மக்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்து, துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார்.