இராஜ: விளம்பரத்தால் மட்டுமே திமுக ஆட்சி நடக்கிறது - கே.டி.ஆர்.

விளம்பரத்தால் மட்டுமே திமுக ஆட்சி நடக்கிறது இராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. ஆர் விமர்சனம். 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் அதிமுக சார்பில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றன. பின்னர் பேசிய அவர், பட்டாசு ஆலை தொழிலாளர்களின் இறப்பை தடுப்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீக்காய தடுப்பு பிரிவை சிவகாசிக்கு கொண்டு வந்தார். தற்போது அந்த பிரிவு செயலற்று உள்ளது. விளம்பரத்தால் மட்டுமே திமுக ஆட்சி நடக்கிறது. கூட்டணியை பலப்படுத்த வேண்டும். பொய்யை சொல்ல வேண்டும். 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக முயன்று வருகிறது, 

ஆனால் வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சவுக்கடி கொடுக்க தயாராகி விட்டார்கள். வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மைனஸ் தான் கொடுத்து உள்ளார்கள், வரும் ஜனவரிக்குப் பிறகு திமுகவின் பலம் சரிந்து அடுத்த ஜனவரியில் அதிமுக ஆட்சி தான் வரும். எடப்பாடி தான் முதல்வராக வருவார் என்ற நிலை உருவாகும், திமுக கூட்டணியில் உள்ள ஆதவ் அர்ஜுனா 2026 தேர்தலில் மன்னராட்சி முறையை ஒழிப்பது தான் முதல் வேலை என்கிறார். இளைஞர்களுக்கு மோசமான உதாரணமாக உதயநிதி இருக்கிறார் என்றார். கூட்டத்தில் நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி