ராஜபாளையம்: வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் செயின் திருட்டு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டி வளையாபதி தெருவில் செந்தில்குமார் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு குறிப்பாக மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருவது வழக்கம். இவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மலேசியாவிற்கு சென்று மறுபடியும் ஜூன் 6ஆம் தேதி ராஜபாளையம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்து திறந்து நிலையில் இருந்தது. 

மேலும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த துணிமணிகள் தரையில் சிதறி கிடந்தன. அதைப்போல் பீரோவில் வைத்திருந்த 6 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,80,000 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் செய்தார். அதன் பேரில் ராஜபாளையம் டிஎஸ்பி (போலீஸ்) ராமகிருஷ்ணன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு உள்பட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி