இராஜ: தம்பதிகள் கொலை வழக்கில் கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது..

இராஜபாளையம் தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நூற்பாலை மேலாளர் ராஜகோபால்(75) அவரது மனைவி குருபாக்கியம்(68) ஆகியோரை கொலை செய்து நகைகளை திருடி சென்றனர்.
கடந்த 2022 ம் வருடம் நடந்த இரட்டை கொலை வழக்கு இராஜபாளையத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. கொலை செய்து விட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி எந்த தடயமும் இல்லாமல் சென்றனர். மேலும் தனிப்படை அமைத்து தீவிரமாக செயல்பட்டும் பெரும் சவாலாகவே இருந்தன. தற்போது முடிவுக்கு வந்த இரட்டை கொலையில் தொடர்புடைய முத்துக்குமாரை போலீசார் விசாரித்த போது, நகைகள் உள்ளதா என்று கேட்ட போது காட்டுகிறேன் என்று கூறியதையடுத்து போலீசார் காவல் நிலையத்திலிருந்து வாகனத்தில் ஏற்ற முயற்ச்சித்த போது திடீரென முத்துக்குமார் தப்பி ஓடி மதில் சுவரை தாண்டிய போது தவறி விழுந்ததில் அவரது கால் உடைந்தது. அவரை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும்கொலை வழக்கில் முத்துக்குமார் இவரது மனைவி தேவி, ரமேஷ், மதன், சதீஷ், சங்கிலிபாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக டிஎஸ்பி பிரீத்தி தலைமையில் தனிப்படை போலிசார் விசாரித்து வருகின்றனர், இதில் மேலும் சிலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

தொடர்புடைய செய்தி