விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவிய கடும் வெயிலால் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (நவம்பர் 08) அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.