மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று (பிப். 15) நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீங்கள் செய்த தவறுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள். நான் மீண்டும் விருதுநகரில் எம்பி ஆக நிற்கப் போவதில்லை. எங்களுக்கு ஆட்கள் குறைவாக இருக்கலாம், பணம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் அரியணை ஏறி இருக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்" என்று கூறினார்.