விருதுநகர்: 24 அடி உயர பிரம்மாண்ட கருப்பசாமி சிலை பிரதிஷ்டை

விருதுநகர் அருகே ஆவல் சூரன்பட்டி கருப்பசாமி சேவா சங்கம் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 80 டன் எடை 24 அடி உயர பிரம்மாண்டமாக கையில் அருவாள் காலில் சலங்கையுடன் முதன்மை தெய்வமான காவல் தெய்வம் கருப்பசாமி சிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கருப்பசாமி பக்தர்கள் ஒன்றிணைந்து கருப்புசாமி சேவா சங்கம் ஒன்றை உருவாக்கினர். 

பக்தர்களால் நிதி திரட்டி பிரம்மாண்ட கருப்பசாமி சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவல் சூரன்குடியில் சிலை வைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து இடம் வாங்கியுள்ளனர். கரூரில் கல் எடுக்கப்பட்டு பழனியில் உள்ள கைதேர்ந்த சிற்பியால் கருப்பசாமி சிலை பிரம்மாண்டமாக வடிவமைக்க ஆர்டர் செய்யப்பட்டது. பல மாத காலமாக நடைபெற்ற சிலை வடிப்பு பணி நிறைவு பெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் ராட்சத கிரேன் உதவியுடன் பழனியில் இருந்து ராட்சத வாகனத்தில் விருதுநகர் அருகே உள்ள ஆவல் சூரன்குடிக்கு கொண்டுவரப்பட்டது. 

பின்னர் ஆகம விதிப்படி நவதானியங்களில் கருப்பசாமி சிலை வைக்கப்பட்டு தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 80 டன் எடை கொண்ட 24 அடி உயரமுள்ள கம்பீரமான கருப்பசாமி காலில் சலங்கையும் கையில் அருவாளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். காண்கோடி பக்தி பரவசமடையச் செய்யும் கருப்பசாமி சிலையை பக்தர்கள் பக்தி பரவசமடைந்து வணங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி