பள்ளிகளில் இருந்து கல்லூரிகளுக்கு மாறுவது ஒவ்வொரு மாணாக்கர்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான கனவாகும். மேலும், உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கல்விக் கடன்கள், உதவித்தொகை, கல்லூரியை அணுகுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்ற குறைகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டிட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது மாணவர்களின் எதிர்கால கனவான உயர்கல்வியை அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, உயர்கல்வியில் சேர இம்முகாமில் கலந்;து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், கேட்டுக்கொண்டுள்ளார்.