விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கட்டடப் பொறியாளர் ஆனந்த் (43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வாகன ஓட்டி ஆனந்த் (41) காயமடைந்தார். ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.