விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு வண்டியில் உதவி ஆய்வாளர் கார்த்திக் ரகுநாத் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வரும்போது மேற்படி வண்டியின் எஸ் போர் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் கொண்டு வந்த இரண்டு டிராவல்ஸ் சூட்கேஸ்கள் மற்றும் சோல்டர் பேக்கில் சுமார் 50 கிலோ மதிக்கத்தக்க கணேஷ் புகையிலை, விமல் பான் மசாலா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவர் மீதும் விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுபோன்று தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி இரு நபர்கள் மீதும் மதுரையில் புகையிலை கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது.