ராஜபாளையத்தில் தொல்லியல் கண்காட்சி நவ. 6 வரை நீடிப்பு

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் மாவட்ட தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று மையம் சார்பில் மாநில அளவிலான இரண்டு நாள் வரலாற்று கருத்தரங்கம், நாணய கண்காட்சி, தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது. இவற்றில் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட சுடுமண் உருவ பொம்மைகள், தண்ணீர் சேமித்து வைக்கும் குடுவைகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் நேரடியாக கொண்டு வந்து
வைக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டைஅகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரடியாக சென்று காண முடியாதவர்களும் மாணவர்கள், பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் கண்டு பயனடைவதற்காக விடுமுறை நாட்களைத் தொடர்ந்து நவ. 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :