விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கள்ளக்காரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மொட்டை இழப்பசாமி கோவிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டுவண்டிகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டுவண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.