பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலி
தென்காசி மாவட்டம மேலநீதிநல்லூரை சேர்ந்த 50 பக்தர்கள் ஆண்டு தோறும் மாலை அணிந்து விரதமிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம். நேற்று மாலை 4 மணிக்கு மேலநீதிநல்லூரில் இருந்து பாதயாத்திரையாக நடந்து கோவில்பட்டி வழியாக நாகர்கோவில் மதுரை நான்கு வழிச்சாலையில் என். சுப்பையாபுரம் விலக்கு அருகே நடந்து சென்ற போது நாகர்கோவிலில் இரூந்து மதுரை நோக்கி சென்ற லாரி நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில் மேலநீதிநல்லூரை சேர்ந்த முருகன் (48), மகேஷ் (37), பவுன்ராஜ் (42) ஆகியோர் பலத்த காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு 108ஆம்புலன் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் லாரி டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி