சாத்தூர்: கிணற்றில் தவறி விழுந்து தவித்த பூனையை மீட்ட இளைஞர்கள்

சாத்தூர் அருகேயுள்ள சின்ன கொல்லபட்டி கிராமத்தில், குடியிருப்புகளுக்கு அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பூனை தவறி விழுந்தது. கிராம இளைஞர்கள் இரண்டு நாட்களாக வாளியில் கயிறு கட்டி உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில், இன்று இளைஞர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து பூனையை பத்திரமாக மீட்டனர். அவர்களின் இந்த முயற்சி கிராம மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி