அருப்புக்கோட்டை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 22. இவர் கட்டங்குடி விலக்கில் தனியார் கடப்பாக்கல் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும், வழக்கம் போல் கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. 

அவரை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றபோழுது அங்கிருந்த மருத்துவர்கள் மணிகண்டன் உயிர் இறந்ததை உறுதி செய்தனர். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை திருப்பதி அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி