புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் "பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்" விருதுக்கு 5 முதல் 18 வயதுக்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீரச் செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதைப் பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இவ்விருது பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 11.07.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.