அருப்புக்கோட்டை: புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (ஜூலை 31) சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 

அதன் பந்தல்குடி, வேலாயுதபுரம், கொப்புசித்தம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டிடம் கட்டுவதற்கும், கலையரங்க கட்டிடங்கள் கட்டுவதற்கும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் பந்தல்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி